நீண்ட சிகிச்சைக்குப் பின் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட உலகின் ஒரே வெள்ளைநிற உராங்குட்டான்
உலகின் ஒரே வெள்ளை நிற உராங்குட்டான் குரங்கு நீண்ட சிகிச்சைக்குப் பின்னர் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
இந்தோனேஷியாவின் போர்னியோ தீவில் வசித்து வந்த ஆல்பா என்ற பெயர் கொண்ட இந்தக் குரங்கு கடந்த ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டது. வெள்ளை நிறமும், நீல நிறக் கண்களும் கொண்ட இந்த குரங்கினை வனப்பகுதியில் இருந்த பழங்குடியினர் பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருந்தனர். இதனையறிந்த போர்னியோ வனத்துறை அதிகாரிகள் ஆல்பாவை கடந்த 2017ம் ஆண்டு கிராமத்தினரிடமிருந்து மீட்டனர்.
நீரிழிவு நோயாலும், கண் புரையாலும் பாதிக்கப்பட்டிருந்த ஆல்பாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது முற்றிலும் குணமடைந்த அந்த அபூர்வக் குரங்கு தற்போது வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.
Comments