கொரோனா வைரஸ் : தொடரும் உயிரிழப்புகள்

0 1623

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ள நிலையில் இத்தாலியிலும், ஈரானிலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 சீனாவின் வூகான் நகரில் இருந்த கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தனது கொடூரக் கரங்களால் உலகின் 89 நாடுகளில் உள்ள மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சீனாவில் மட்டும் 3 ஆயிரத்து 42 பேரைக் காவு வாங்கிய இந்த வைரஸ் அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 148 பேரையும், ஈரானில் 108 பேரையும் பலிவாங்கி உள்ளது. இந்த நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தலா 3 ஆயிரத்துக்கு மேல் இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கத்தினால் பெரும்பாலும் வயதானவர்களே உயிரிழந்தது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. 60 முதல் 80 வயதிற்கு மேற்பட்டவர்களின் உயிரிழப்பு 21 புள்ளி 9 விழுக்காடாகவும், 50 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 விழுக்காடாகவும், அந்த வயதிற்கு கீழ் உள்ளவர்கள் புள்ளி 2 முதல் ஒன்று புள்ளி 3 விழுக்காடு வரை உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவில் கொரோனா தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உள்ள நிலையில் 221 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. விஷக்கிருமியின் தாக்கத்தினால் அமெரிக்க பங்குச் சந்தை சுமார் ஆயிரம் புள்ளிகள் குறைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக சுமார் 8 புள்ளி 3 பில்லியன் டாலரை செலவிட செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் பிரான்சில் கொரானாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 423 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் தற்போது கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட ஒருவர் உயிரிழந்திருப்பது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் தற்போது 17 பேருக்கு கொரோனாவின் தாக்கம் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் கொரோனா கிருமி தாக்குதல் காரணமாக கடந்த மாதத்தில் 7 ஆயிரம் விமான சேவைகளை நிறுத்தியுள்ளதாக லுப்தான்ஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments