தேனாம்பேட்டை நாட்டு வெடிகுண்டு சம்பவம் - பிரபல ரவுடிகள் இருவரைக் கொல்ல நடந்த திட்டம்
சென்னை தேனாம்பேட்டையில், நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம், பிரபல ரவுடிகள் இருவரைக் கொல்வதற்காக நடந்த முயற்சி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்ணாசாலையில் சென்ற ஒரு வாகனத்தின் மீது செவ்வாயன்று அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில், மகேஷ் எனும் நபர் மற்றும் கல்லூரி மாணவன் ஆகிய இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.
விசாரணையில் புழல் சிறையில் உள்ள புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடியின் திட்டப்படி இக்கொலை முயற்சி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிய ரவுடிகள், ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக, நான்கு பேர், மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments