எகிப்து மன்னர் ஜோசரின் பிரமிடு 14 ஆண்டுக்கால மறுசீரமைப்பு பணிக்கு பின் திறப்பு

0 1553

எகிப்தில், மன்னர் ஜோசரின் பிரமிடு 14 ஆண்டுக்கால மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு திறந்துவைக்கப்பட்டது. சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முந்தைய பிரமிடு, சக்காரா எனும் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவந்த மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், பிரமிடு திறக்கப்பட்டது. சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ள இது, முழுக்க கான்கிரீட் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பிரமிடு எனவும் கூறப்படுகிறது. யுனெஸ்கோவின் பாரம்பர்ய பட்டியலிலும் இது இடம்பிடித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments