கொரானா பீதியால் உம்ரா பயணத்திற்கு சவுதி தடை
கொரானா கிருமி தாக்குதல் எதிரொலியாக இஸ்லாமியர்களின் புனித நகரமாக மெக்கா வருவதற்கு விதிக்கப்பட்ட தடையால் அங்குள்ள காபா வெறிச்சோடிக் காணப்படுகிறது.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா தாக்குதலைத் தொடர்ந்து மெக்காவில் உள்ள காபாவுக்கு உம்ரா எனப்படும் புனிதப் பயணம் மேற்கொள்ள சவுதி அரசு தடை விதித்தது. இதனால் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் காபா பகுதி தற்போது யாருமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தற்போது அங்கு மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் நோய் தொற்று வராமல் தடுக்கும் வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர்.
Comments