கொரானா வைரஸ் பீதி : விமான போக்குவரத்து துறை நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி இழப்பு

0 1226

கொரானா வைரஸ் பீதி காரணமாக நடப்பாண்டில் விமான போக்குவரத்து துறை நிறுவனங்களுக்கு 7லட்சத்து 91ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பான ஐஏடிஏ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் உலக நாடுகள் பலவற்றிலும் கொரானா வைரஸ் நோய் பாதிப்பின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதால் பல நாடுகள் தங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக விமானச் சேவை நிறுவனங்களின் பயணிகள் வர்த்தகம் வாயிலான வருவாய் 6ஆயிரத்து 300 கோடி டாலர் முதல் 11ஆயிரத்து 300 கோடி டாலர் வரை குறையும்)என மதிப்பிடப்பட்டுள்ளது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments