சீருடைப் பணியாளர்கள் தேர்வு நேர்மையாக நடத்தப்பட்டுள்ளது - சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் பதில் மனு

0 1701

காவலர் உள்ளிட்ட சீருடைப் பணியாளர்கள் தேர்வு நேர்மையாக நடத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 8,888 பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதனை சிபிஐ விசாரிக்கவேண்டும் எனவும், திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டதுடன், மாநிலத்தில் உள்ள 32 மையங்களில் ஐ.ஜி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மேற்பார்வையில், எவ்வித முறைகேடும் இன்றி தேர்வு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments