டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53
டெல்லியில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் குடியுரிமைச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய இந்த வன்முறை, அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதில் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை தினம்தோறும் அதிகரித்து வருகிறது.
மேலும், வன்முறை பாதித்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வன்முறையில் காயமடைந்து குரு தேஜ் பகதூர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.
இதன்படி, குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் 44 பேர், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் 5 பேர், லோக் நாயக் மருத்துவமனையில் 3 பேர் மற்றும் ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் இதுவரை 53 பேர் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments