YES Bank- கிற்கு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த Reserve Bank

0 2829

பிரபல தனியார் வங்கியான யெஸ் வங்கி கணக்கில் இருந்து அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளது.

வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட பல காரணங்களால், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் யெஸ் வங்கி மீது பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ள ரிசர்வ் வங்கி, நிர்வாக செயல்பாடுகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், வாடிக்கையாளர்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

மருத்துவம், மேற்படிப்பு கட்டணம், திருமணம் உள்ளிட்ட தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு வங்கி மேலாளரின் அனுமதியுடன் 5 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments