சீன பூனையும் சி.எஸ்.எப் அதிகாரிகளும்..! திருப்பி அனுப்ப இயலாமல் தவிப்பு

0 1935

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வரும் நிலையில், விளையாட்டுப் பொருட்கள் கண்டெய்னரில் சென்னை துறைமுகத்திற்கு வந்திறங்கிய சீனப் பூனையை திருப்பி அனுப்ப வழி தெரியாமல் துறைமுக அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

சீனாவில் இருந்து பரவிய கொரானா வைரஸ் பீதி உலகையே நடங்கச் செய்துள்ளநிலையில் கடந்த மாதம் சீனாவில் இருந்து சுமார் 40 லட்சம், மதிப்புடைய விளையாட்டு பொருட்களுடன் கப்பலில் வந்த கண்டெய்னரில் சீன நாட்டு பூனை ஒன்று சட்ட விரோதமாக கடத்திவரப்பட்டது.

சென்னை துறைமுகத்தின் சி.எஃப்.எஸ் பகுதியில் உள்ள சீன கண்டெய்னருக்குள் இருந்த பூனையை கண்டுபிடித்து, துறைமுக கழக சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் தனியார் கண்டெய்னர் நிறுவன காவலாளி நாகராஜ். நாடு முழுவதும் கொரானா முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இரு வாரங்களை கடந்தும் இதுவரை சீன நாட்டு பூனை திருப்பி அனுப்பப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பூனை பாதுகாப்பான பகுதியில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், பூனை வந்த கண்டெய்னர் சீல் வைக்கப்பட்டு அந்த கண்டெய்னரில் உள்ள பொருட்களை வெளியில் எடுக்க அதிகாரிகள் இதுவரை அனுமதியளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தனியார் கண்டெய்னர் உரிமையாளர், பூனை இருந்ததை வெளியில் சொன்ன காவலாளி நாகராஜுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்ததோடு அவரை தாக்கி விரட்டியதாகவும் கூறப்படுகிறது.

சீனப்பூனை இருப்பதை வெளியில் சொன்னதால் தாக்குதலுக்குள்ளான காவலாளி நாகராஜ் அளித்த புகாரின் பேரில் கண்டெய்னர் உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments