கொரானா வைரஸ் பீதியால் ஏசு பிறந்ததாகக் கருதப்படும் தேவாலயம் மூடப்பட்டது
கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக, பாலஸ்தீனப் பகுதியில் இயேசு கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் பெத்லேஹம் தேவாலயம் மூடப்பட்டது.
கொரானா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பாலஸ்தீனப் பகுதியிலுள்ள தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை மூடுவதற்கு பாலஸ்தீன அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, இயேசு கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் பெத்லேஹமிலுள்ள கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான கிறிஸ்து பிறப்பிட தேவாலயத்தையும் மூட தேவாலய நிர்வாகிகள் ஒப்புக் கொண்டனர்.
பாதுகாப்பே அனைத்திலும் முதன்மை என்பதால், பாலஸ்தீன அரசு மீண்டும் அனுமதிக்கும் வரை பிறப்பிட தேவாலயம் மூடப்பட்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments