ஜெய்பூரில் மாலை பொழுதில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மாலையில் ஆலங்கட்டி மழை பெய்தது.
கடந்த 2 தினங்களாகவே இப்பகுதியானது பனிமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் ஜெய்பூர் நகரம், மற்றும் அதன் அருகாமையில் இருக்கும் சக்சூ ((chaksu)) ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
சிறிய கல் வடிவில் விழுந்த ஆலங்கட்டிகள் சாலைகள், வயல்வெளிகள், புல்வெளிகள் என அனைத்து இடங்களிலும் பரவிக்கிடந்தன. கோதுமை, கடுகு ஆகியவை விளைகின்ற காலத்தில் இந்த மழை பெய்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தென்மேற்கு ஆப்கானிஸ்தான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புயல் ஏற்பட்டு இருப்பதாகவும், அதன் தாக்கம் வடக்கு ஹரியானா மற்றும் வடகிழக்கு ராஜஸ்தானில் ஏற்பட்டு இருப்பதால், தற்போது இந்த திடீர் ஆலங்கட்டி மழை பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments