ஜெட் ஏர்வேஸ் நிறுவன முன்னாள் தலைவர் நரேஷ் கோயல்மீது புதிய வழக்கு
முடங்கி உள்ள ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளிடம் பெற்ற 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையில் பெரும் பகுதியை வெளிநாட்டுக்கு சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் மூலம் கொண்டு சென்றதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டி வருகிறது.
இந்த விவகாரத்தில் பெமா சட்டத்தின்கீழ் கோயல் மீதும், ஜெட் ஏர்வேஸ் மீதும் முதலில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் நேற்று புதிதாக வழக்குப்பதிவு செய்து, மும்பையிலுள்ள கோயலின் வீடு உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவரை அழைத்துச் சென்ற அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments