கைகளில் குறைபாடுடன் பிறந்த சிறுமிக்கு கையை பரிசளித்த சூப்பர் ஹீரோ..!

0 2617

பிரபல ஹாலிவுட நடிகர் மார்க் ஹாமில் கைகளில் குறைபாடுடன் பிறந்த சிறுமிக்கு செயற்கை  கையை பரிசளித்துள்ளார்.

பெல்லா டட்லாக் என்னும் சிறுமி பிறக்கும் போதே வலது கையில் விரல்கள் இல்லாமலும், இடது கை முழுமை அடையாமல் பிறந்தவர்.  பின்னர் அறுவை சிகிச்சைக்கு பிறகு வலது கையில் நான்கு விரல்கள் பொருத்தப்பட்டது.

இச்சிறுமி அமெரிக்காவில் நவீன முறையில் செயற்கை கைகளை தயாரிக்கும் நிறுவனமான ”ஓபன் பயோனிக்” மூலம் தனக்கு செயற்கை கை பொருத்துவதற்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த அதிநவீன செயற்கை கைகளின் விலை சற்று அதிகமாக இருந்ததால் தன்னுடைய கனவை நினைவாக்க நிதி உதவி அளிக்க தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார் இந்த சிறுமி.

இந்த பதிவை பார்த்த பிரபல ஹாலிவுட் நடிகர் ”மார்க் ஹாமில்”( ஸ்டார் வார்ஸ் படத்தில் வரும் ஸ்கை வாக்கர் கதாபாத்திரத்தில் நடித்தவர் ) அந்த சிறுமியின் பதிவை பகிர்ந்தது மட்டுமல்லாது அந்த சிறுமிக்கு தேவையான நிதியை அளிக்க அனைவரும் உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஹாமிலின் இந்த வேண்டுகோளை ஏற்று ஏராளமான ரசிகர்கள் அந்த சிறுமிக்கு நிதி உதவி அளித்தனர் அப்படி கடந்த நவம்பர் மாதம் பகிர்ந்த அந்த பதிவிற்கு சுமார் 14ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் பத்து லட்சம் ரூபாய் நிதி திரண்டது. இதனால் அந்த சிறுமிக்கு ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போன்ற அதிநவீன செயற்கை கை பொருத்தப்பட்டது.

image

மேலும் இத்தனை நாள் கைகள் இல்லாமல் இருந்த அந்த சிறுமியின் மகிழ்ச்சியை தானும் பார்த்து மகிழ மார்க் ஹாமில் வீடியோ காலிங் மூலம் அந்த சிறுமியுடன் பேசி மகிழ்ந்தார், அந்த சிறுமியும் தன்னுடைய விருப்பப்படமான ஸ்டார் வார்ஸ் குறித்து ஹாமிலுடன் பேசி, தனக்கு புதிதாக கிடைத்துள்ள கையை காட்டியும், அதன் மூலம் பொருட்களை எடுத்து காட்டியும் தன் கனவை நனவாக்கிய ரியல் ஹீரோவோடு பேசி மகிழ்ந்தார்.

தன்னுடைய கனவுக் கையை பற்றி சிறுமி கூறும்போது ”எனக்கு இப்போது இரண்டு கைகள் உள்ளன. இனி நானும் எனது நண்பர்களை போலவே சைக்கிள் ஓட்ட முடியும், கைகளால் எல்லா பொருட்களையும் எடுக்க முடியும்” என தன்னுடைய புதிய கையை பற்றி உற்சாகமாக கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

image

ஸ்டார் வார்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லூகாஸ் பிலிம்ஸ், ஓபன் பயோனிக்ஸ் நிறுவனமும் இணைந்து ஸ்டார் வார் படத்தில் வரும் R2D2 ரோபோ மாதிரியில் செயற்கை கைகளை தயாரிக்க ஏற்கனவே ஒப்பந்தம் போட்டுக் கொண்டு உள்ளன.நடிகர் மார்க் ஹாமிலும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வரும் நிலையில் இந்த சிறுமிக்கு உதவியதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் ஹாமிலை பாரட்டிய வண்ணம் உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments