கல்லூரி மாணவர்கள் படிக்கும்போதே வேலைக்குச் செல்லும் திட்டத்துக்கு ஒப்புதல்

0 1906

கல்லூரி மாணவர்கள் படிக்கும்போதே பகுதிநேர வேலைக்குச் செல்லும் திட்டத்துக்குக் கேரள மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

18 வயது முதல் 25 வரையுள்ள மாணவர்கள் படிக்கும்போதே வேலைக்குச் செல்வதற்காக அரசுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் ஆண்டுக்கு 90 நாட்கள் பணி உத்தரவாதம் அளிக்கக் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் கிடைக்கும் மதிப்பூதியம் மாணவர்களின் படிப்புச் செலவுக்கும் குடும்பத் தேவைக்கும் உதவும். மாணவர்களுக்கு வேலைக்குச் செல்லும் பழக்கம் ஏற்படுவதுடன் அவர்களின் பணித்திறனும் மேம்படும். இந்தப் புதிய திட்டத்துக்குக் கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments