அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிட்டார் ப்ளும்பெர்க்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலில் இருந்து விலகுவதாக பிரபல தொழிலதிபர் மைக்கேல் ப்ளும்பெர்க் அறிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய நடைபெறும் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென், பெர்னி சான்டர்ஸ், ப்ளும்பெர்க் உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் ட்விட்டரில் ப்ளும்பெர்க் வெளியிட்டுள்ள பதிவில், டிரம்பை தோற்கடிக்கவே தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததாகவும், அந்த காரணத்துக்காகவே தற்போது விலகும் முடிவை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தலில் ஜோ பிடெனை ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments