டெல்லி கவலவரத்தின்போது வன்முறை கும்பல் போலீஸை தாக்கும் பதைபதைக்கும் வீடியோ
டெல்லி கலவரத்தின்போது போலீஸாரை சுற்றிவளைத்து வன்முறைக் கும்பல் தடிகளாலும், கற்களாலும் கொடூரமாக தாக்கும் பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டத்தில் ஈடுபட்டோர் இடையே மூண்ட மோதல் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின்போது சந்த்பாக் எனுமிடத்தில் கடந்த மாதம் 24ம் தேதி தலைமை காவலர் ரத்தன் லால் என்பவர் வன்முறை கும்பலால் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின்போது அங்குள்ள கட்டிடம் ஒன்றின் மீது இருந்து ஒருவர் எடுத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
பதைபதைக்கும் வீடியோ காட்சியில் கும்பல் ஒன்றை போலீஸார் முதலில் விரட்டியடிக்கும் காட்சி உள்ளது. இதேபோல் அவ்வழியே பேரணியாக வந்த இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட நூற்றுகணக்கானோர் போலீஸார் மீது கையில் கிடைத்த கட்டைகள், கற்களை வீசி தாக்கும் காட்சியும், அவர்களோடு முதலில் ஓடிய நபர்களும் சேர்ந்து தாக்குதல் நடத்தும் காட்சியும் உள்ளது.
சாலையின் நடுவே கம்பி தடுப்பு இருந்ததால், போலீஸாரால் விரைவாக செல்ல முடியவில்லை. இதை பயன்படுத்திய கும்பல், போலீஸாரை சுற்றி வளைத்து தாக்கியது. இதனால் அடி தாங்காத போலீஸார் காயத்துடன், கம்பி தடுப்பு மீது ஏறிகுதித்து மறுபக்கம் ஓடி சென்றனர்.
தாக்குதலில் தலைமை காவலர் ரத்தன் லால் சிக்கி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மேலும் மூத்த அதிகாரிகள் அமித் சர்மா, அனுஜ் சர்மா ஆகியோரும் காயமடைந்தனர். டெல்லி போராட்டம் தொடர்பாக காவல்துறை மீது குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்த வீடியோ காட்சி அமைந்திருப்பதாக கூறப்படுகிறது
Comments