தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் குறைப்பு
நடப்பு நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.65 விழுக்காட்டில் இருந்து எட்டரை விழுக்காடாகக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக மத்தியத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 2015- 2016 நிதியாண்டில் 8 புள்ளி 8 விழுக்காடாக இருந்தது. அடுத்த இரண்டு நிதியாண்டுகளும் 8 புள்ளி ஐந்து ஐந்து விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் 2018 - 2019 நிதியாண்டில் 8 புள்ளி ஆறு ஐந்து விழுக்காடாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் வட்டி விகிதத்தைப் பூச்சியம் புள்ளி ஒன்று ஐந்து விழுக்காடு குறைத்து எட்டரை விழுக்காடாக ஆக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக மத்தியத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தெரிவித்துள்ளார்.
Comments