ஜெயலலிதா கதாபாத்திரத்திற்காக உடல் எடையை அதிகரித்து வரும் கங்கனா

0 1221

ஜெயலலிதா பாத்திரத்தில் நடிப்பதற்காக தலைவி படத்தின் நாயகி கங்கனா தனது உடல் எடையை 20 கிலோ கூட்டியுள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி வரும் தலைவி படம் வரும் ஜூன் 26ம் தேதி வெளியாகிறது.

இறுதி கட்ட படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதா பாத்திரத்தில் நடித்துவரும் பாலிவுட் நடிகை கங்கனா, அரசியல் பிரவேசத்திற்கு பின்னான ஜெயலலிதாவின் தோற்றத்தில் திரையில் தோன்றுவதற்காக உடல் எடையை அதிகரித்து வருகிறார்.

அவரது பயிற்சியாளர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், 70 கிலோ அளவுக்கு கங்கனாவின் உடல் எடை கூடியுள்ளது.

தலைவி படத்தை தொடர்ந்து தேஜஸ் எனும் படத்தில் விமானியாகவும், தாகட் எனும் படத்தில் சண்டை பயிற்சியாளராகவும் நடிக்கவுள்ள கங்கனா, 2 மாதங்களுக்கு பின் எடையை குறைக்கவுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments