நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் 20ஆம் தேதி தூக்கு

0 12395

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் 4ஆவது முறையாக மரண வாரண்டு பிறப்பித்துள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு நேற்று நிராகரிக்கப்பட்டதால், டெல்லி திகார் சிறை நிர்வாகம் 4 பேரையும் தூக்கிலிட புதிய வாரண்டு பிறப்பிக்கக்கோரி டெல்லி  கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தை அணுகியது. ஏற்கெனவே 3 முறை வாரண்டு பிறப்பித்து ரத்தான நிலையில், புதிதாக விடுக்கப்பட்ட இந்த கோரிக்கை மீது நீதிமன்றம் இன்று பரிசீலித்தது.

அப்போது டெல்லி அரசு தரப்பில் 4 பேரும் அனைத்து சட்ட உபாயங்களையும் பயன்படுத்தி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி தர்மேந்திர ரானா, 4 பேரையும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments