தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகை ரூ. 76,746 கோடியை உடனடியாக செலுத்த அரசு அறிக்கை
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 76 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாகச் செலுத்தக் கோரி அரசு அறிக்கை அனுப்பியுள்ளது.
உரிமக்கட்டணம், வரி, அலைக்கற்றைக் கட்டணம் உள்ளிட்ட வகைகளில் வோடாபோன், ஏர்டெல், டாட்டா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு ஒரு லட்சத்து 2447 கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. அரசின் மதிப்பீட்டை ஏற்றுக்கொள்ளாத இந்த நிறுவனங்கள், தங்கள் கணக்கீட்டின்படி குறைவான தொகையே செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்தன.
3 நிறுவனங்களும் சேர்ந்து இதுவரை மொத்தம் 25 ஆயிரத்து 701 கோடி ரூபாய் செலுத்தியுள்ளன. இந்நிலையில் மீதமுள்ள 76 ஆயிரத்து 746 கோடி ரூபாயைத் தாமதமின்றி உடனடியாகச் செலுத்தக் கோரி அந்த நிறுவனங்களுக்குத் தொலைத்தொடர்புத்துறை சார்பில் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Comments