முதன்முறையாக இறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி..!
மகளிருக்கான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்திய - இங்கிலாந்து அணிகள் இடையே சிட்னியில் நடைபெற இருந்தது. இடைவிடாத மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.
ஏற்கெனவே தகுதிச் சுற்றில் பெற்ற வெற்றிப் புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய - தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கின்போது மழை குறுக்கிட்டதால் டக்ஒர்த் லீவிஸ் முறையில் அந்த அணி வெற்றிபெற 13 ஓவர்களில் 98 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு குறிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அணி 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 92 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
49 ரன்கள் குவித்த மேக் லேனிங் ஆட்ட நாயகி விருது பெற்றார். மார்ச் 8ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய - இந்திய அணிகள் மோதுகின்றன.
Comments