நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் துப்பாக்கி கண்டெடுப்பு
நரேந்திர தபோல்கரைச் சுட்டுக்கொல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கைத்துப்பாக்கியை மும்பையில் உள்ள கடற்கரை கழிமுகத்தில் இருந்து நார்வே நீச்சல் வீரர்கள் கண்டெடுத்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் தபோல்கர் புனேயில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்த வழக்கில் 7பேர் மீது சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.
அவர்களில் இருவருக்கு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையிலும், கல்வியாளர் கல்புர்க்கி கொலையிலும் தொடர்புள்ளது. தபோல்கரைக் கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கியைக் கொலையாளிகள் தானே கடற்கரை கழிமுகத்தில் வீசியதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து நார்வேயில் இருந்து முக்குளிப்போரையும், காந்தப்புலம் கொண்ட கருவிகளையும் வரவழைத்துத் தேடியதில் ஒரு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தேடுதல் பணிகளுக்கு மொத்தம் ஏழரைக் கோடி ரூபாய் செலவிட்டதாகக் கூறப்படுகிறது.
Comments