குடிநீர் சுத்திகரிப்பு ஆலையைப் தொடங்க விரும்புபவர்கள் விண்ணப்பித்தால் உடனுக்குடன் அனுமதி - நீர்வள ஆதாரத்துறை

0 1231

தமிழகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையைப் புதிதாகத் தொடங்க விரும்புபவர்களும், ஏற்கெனவே ஆலை நடத்தி வருபவர்களும் விண்ணப்பித்தால் உடனுக்குடன் அனுமதி வழங்கப்படும் என நீர்வள ஆதாரத்துறை அறிவித்துள்ளது.

நீர்வள ஆதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய ஆலை தொடங்குவதற்கான அனுமதி பெறவும், ஏற்கெனவே ஆலை நடத்துபவர்கள் மறு அனுமதி பெறவும் www.groundwatertnpwd.org.in என்கிற வலைத்தளத்தில் விண்ணப்பப் படிவங்கள், விவரங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

சென்னை தரமணியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில், மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையத்தின் தலைமைப் பொறியாளருக்கு விண்ணப்பித்தால் சட்டத்திட்டங்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனுக்குடன் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments