கொரானா பற்றி தீர்க்கதரிசனம்.. அதிசயப்படுத்தும் அமெரிக்க எழுத்தாளர்..!

0 8465

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரானா தொற்று பற்றி 12 ஆண்டுகளுக்கு முன்னரே நூல் ஒன்றில் எழுதி நம்மை வியப்பின் எல்லைக்கு கொண்டு சென்றுள்ளார் அமெரிக்க உளவியல் எழுத்தாளர் ஒருவர். குருவி இருக்க பனம்பழம் விழுந்தது என்பது போல இது எதேச்சையான ஒன்று என இதை அவ்வளவு எளிதாக ஒதுக்கி விட முடியவில்லை. அது என்னவென்று பார்க்கலாம்.

2020 ல் கொரானா வெடிக்கும் எனவும் அதன் கோர கரங்கள் உலகத்தையே சுற்றி வளைத்து ஆயிரக்கணக்கான மக்களை காலனின் தொட்டிலுக்கு அனுப்பும் எனவும் 12 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு எழுத்தாளர் கூறி இருக்கிறார் என்றால் அதை நம்ப முடிகிறதா...

ஆனால் அதை நம்பும் கட்டாயத்திற்கு நம்மை தள்ளி விடுகிறார் 2013 ல் மறைந்த பிரபல அமெரிக்க எழுத்தாளர் சில்வியா பிரவுன். 2008 ல் இவர் எழுதிய End of Days: Predictions and Prophecies about the End of the World என்ற நூலின் 312 ஆவது பக்கம் இன்று திகிலாய் எழும்பியுள்ள கொரானாவை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது.

இதன் தமிழாக்கம் இது தான்... 2020 வாக்கில் நிமோனியா போன்ற ஒரு நோய் உலகம் முழுதும் பரவும்...நுரையீரல்களையும் சுவாச குழாய்களையும் பாதித்து அது பலருக்கு எமனாக முடியும். எந்த மருந்தாலும் அதை கட்டுப்படுத்தவோ, ஒழிக்கவோ முடியாது..

அதே சமயம் அதில் ஆறுதல் தரக்கூடிய ஒரு விஷயமும் இருக்கிறது. அதாவது எந்த வேகத்தில் இந்த நோய் பரவுமோ, அதே வேகத்தில் அது மறைந்து விடும் என்பது தான் அது.

இந்த தகவல் இப்போது இணையத்தில் வைரலாய் கொடி கட்டிப் பறக்கிறது. இதைப் படிப்பவர்கள் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் வியர்வையில் குளிப்பதாக ஆங்காங்கே இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments