இந்துக் கோவில் கட்டுவதற்கு ரூ. 3 லட்சம் நன்கொடை பெற்றுக்கொடுத்த இஸ்லாமியர்

0 3672

தமிழகத்தில் இருந்து சென்று குஜராத் மாநிலத்தில் வாழ்ந்துவரும் இஸ்லாமியர் ஒருவர் தனது சொந்த ஊரில் இந்துக் கோவில் கட்டுவதற்காக 3 லட்ச ரூபாய் நன்கொடை பெற்றுக்கொடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியைச் சேர்ந்த முகமது அனீப் சேக் என்பவர் குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திண்டுக்கல் பாறைப்பட்டியில் இந்துக் கோவில் கட்டுவதற்கு நன்கொடை திரட்ட அவர் நண்பரான விஜயகுமார் முகமது அனீப் சேக் வீட்டுக்கு வந்துள்ளார்.

இருவரும் பல்வேறு மதரசாக்களுக்கும், நண்பர்களின் வீடுகளுக்கும் சென்று 3 லட்ச ரூபாய் நன்கொடை திரட்டியுள்ளனர். பாறைப்பட்டி மக்கள் தங்களை இந்துக்களாகவோ, இஸ்லாமியராகவோ நினைப்பதில்லை என்றும், உறவினர்களாகவும் நண்பர்களாகவும் பழகி வருவதாகவும் மத நல்லிணக்கத்துக்குச் சான்றாகத் திகழும் இந்த நண்பர்கள் தெரிவிக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments