CAA போராட்டம்: பகைமையைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் போது தேசவிரோத முழக்கம் எழுப்பியும் பகைமையைத் தூண்டும் வகையிலும் பேசியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது. இதனால் மனுதாரர்கள் விரைவான விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
நான்கு வாரங்களுக்கு விசாரணையை ஒத்தி வைத்தது நியாயமில்லை என்று கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, வெள்ளிக்கிழமையன்று விசாரணையைத் தொடரும் படி உயர்நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
Comments