ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயலின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை
ஜெட் ஏர்வேசின் நிறுவனர் நரேஷ் கோயலின் வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் சுமார் 46 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீதும், மனைவி அனிதா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் விசாரணை தொடங்கிய போது, கோயல் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினரால் விசாரிக்கப்பட்டார்.
அபுதாபியைச் சேர்ந்த எடிஹாட் (Etihad) ஏர்வேஸ் ஜெட் நிறுவனத்தில் சுமார் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்தது தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
Comments