உச்ச நீதிமன்றம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்திற்கு அனுமதி வழங்குகிறது
உச்ச நீதிமன்றம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை அனுமதித்து, ரிசர்வ் வங்கியின் 2018 சுற்றறிக்கையை ரத்து செய்துள்ளது.
கிரிப்டோகரன்ஸிகளில் வர்த்தகம் செய்ய வங்கிகளைத் தடுத்த இந்திய ரிசர்வ் வங்கியின் 2018 சுற்றறிக்கைக்கு எதிரான மனுவிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. இதில், இனி கிரிப்டோகரன்ஸிகளில் வர்த்தகம் அனுமதிக்கப்படும், என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2018 இல், ரிசர்வ் வங்கி மற்றும் நிதி சேவைகளை பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சியில் கையாள்வதைத் தடைசெய்து சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில், பொதுவாக, கிரிப்டோகரன்சிகள் என்பது டிஜிட்டல் நாணையங்கள் ஆகும் என்றும், இது நாணய அலகுகளின் தலைமுறையை ஒழுங்குபடுத்துவதற்கும், நிதி பரிமாற்றத்தை சரிபார்க்கவும் குறியாக்க நுட்பங்கள் பயன்படுத்தி வருகின்றன. இது மத்திய வங்கிகளை தவிர்த்து சுயமாக இயங்குகிறது என்று குறிப்பிட்டிருந்தது.
கிரிப்டோ கரன்சிகளால், நுகர்வோர் பாதுகாப்பு, சந்தை ஒருமைப்பாடு மற்றும் பணமோசடி அதிகரிக்கும் என கூறியிருந்தது. இதனால், அதனுடன் தொடர்புடைய அபாயங்களைக் கருத்தில் கொண்டு, கிரிப்டோ கரன்சிகள் தொடர்பான வணிகங்களை கையாள வேண்டாம் என்று வங்கிகள் கேட்டுக் கொண்டன. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற இந்த சுற்றறிக்கைக்கு, இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IMAI) குழு சவால் செய்துள்ளது.
Comments