மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு - முதல்வர் கமல்நாத்

0 1160

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதாக முதலமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களில் 8 பேரை பாஜக விலைக்கு வாங்கி ஹரியானாவின் குர்கானில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளதாகத் திக்விஜய்சிங் குற்றஞ்சாட்டினார்.

அவர்களில் இருவர் திரும்பி வந்துவிட்டதாகவும் 4பேரை மாநில பாஜக தலைவர் நரோத்தம் மிஸ்ரா பெங்களூருக்கு அழைத்துச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. பணியைச் செய்ய முடியாமலும், மக்களுக்குப் பதில் சொல்ல முடியாமலும் உள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 20 பேர் தன்னிடம் தொடர்பில் உள்ளதாக மாநில பாஜக தலைவர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதனிடையே சட்டமன்றத்தில் தங்களுக்கு முழுப் பெரும்பான்மை உள்ளதாகவும், பட்ஜெட் கூட்டத்தின்போது அதை மெய்ப்பிக்கப் போவதாகவும் முதலமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments