ஸ்ரீதேவியின் நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற அஜித்

0 2020

சென்னையில் நடைபெற்ற மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் நடிகர் அஜித்குமார் கலந்துகொண்டார்.

2018ஆம் ஆண்டு காலமான நடிகை ஸ்ரீதேவியின், இரண்டாம் ஆண்டு நினைவு நாள், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு 2ம் ஆண்டு திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் நடிகர் அஜித்குமாரும் கலந்து கொண்டார்.

ஸ்ரீதேவியுடன் இங்கிலீஸ் விங்கிலீஸ் என்ற படத்தில் நடித்திருந்த அஜித், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துவரும் வலிமை படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments