கொரானா வைரஸ் : ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் மீட்க இந்திய அரசு நடவடிக்கை

0 1282

கொரானா அச்சுறுத்தல் இருப்பதால், ஈரானில் உள்ள தங்களை உடனடியாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டிலுள்ள தமிழக மீனவர்கள் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் சுமார் 340 பேர், ஈரானில் உள்ள தீவு ஒன்றிலிருந்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தங்களது பாஸ்போர்ட்களை ஈரானில் உள்ள முதலாளிகள் வைத்துள்ளதாகவும், ஊருக்கு அனுப்பிவைத்தால் தொழில் பாதிப்படையும் என கருதி முதலாளிகள் பாஸ்போர்ட்களை தர மறுப்பதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்களை உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல இந்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments