கடன் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பிக்கு 7 ஆண்டுகள் சிறை...
கடன் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி கே.என்.ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் ராமச்சந்திரன், அதன் கீழ் இயங்கும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்வதற்காக செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உரிய ஆவணங்கள் இலலாமல் 20 கோடி கடன்பெற்றுள்ளார்.
இதற்காக வங்கி மேலாளர் தியாகராஜன் குடும்பத்துடன் அமெரிக்கா சென்று வர 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், முன்னாள் எம்பி ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ராஜ சேகரனுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும் விதித்து உத்தரவிட்டது.
அதே போல் கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளைக்கு 15 கோடியே 20 லட்ச ரூபாயும், ராமச்சந்திரனுக்கு சுமார் 1 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை கேட்டு வங்கி மேலாளர் தியாகராஜன் நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
Comments