குரூப்-4 முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்களிடம் மூன்றாவது முறையாக சிபிசிஐடி போலீசார் விசாரணை

0 1459

குரூப் 4 முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள் ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தனிடம், சிபிசிஐடி போலீசார் மூன்றாவது முறையாக மதுரை மேலூரில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்பகுதியின் புறவழிச் சாலையிலுள்ள தனியார் ஹோட்டல் அருகே அரசு வாகனத்தில் இருந்து, விடைத்தாள்களை எடுத்து விடைகளை எழுதி வைத்ததாக கைது செய்யப்பட்ட இடைத்தரகர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தன் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று, மேலூர் விஏஓ முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில், கடந்த 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஏஓ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் மேலும் பத்து பேருக்கு தொடர்பிருப்பதாகவும் இடைத்தரகர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments