நிர்பயா வழக்கு: பவன்குப்தாவின் கருணை மனுவும் நிராகரிப்பு
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பவன்குப்தா அனுப்பிய கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.
நிர்பயா பாலியல் பலாத்காரக் கொலை வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு டெல்லி பாட்டியாலா அவுஸ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
குற்றவாளிகளின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கெனவே குற்றவாளிகளில் மூவரான முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகியோரின் கருணை மனுக்களைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். இந்நிலையில் கடைசியாகப் பவன் குப்தாவின் கருணை மனுவையும் நிராகரித்துள்ளார்.
குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ஆம் தேதி தூக்கிலிடத் திட்டமிடப்பட்ட நிலையில், இந்தக் கருணை மனு நிலுவையில் இருந்ததைக் காரணம் காட்டித் தண்டனையை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
Comments