சீனாவை தவிர்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள்.. முதலீட்டை கவர இந்தியாவுக்கு வாய்ப்பு..!

0 1215

சீனாவில் கொரானா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தை சரியாக பயன்படுத்தினால், கோடிக்கணக்கான வெளிநாட்டு முதலீட்டை இந்தியாவால் கவர முடியும் என வர்த்தக-பொருளாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரானா தொற்றை அடுத்து சீனாவில் தங்களது முதலீடு மற்றும் உற்பத்தியை நிறுத்தத்துவங்கியுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பார்வையை வேறு நாடுகளை நோக்கி திருப்பி உள்ளன.

பிரம்மாண்டமான நிலப்பரப்பு மற்றும் கோடிக்கணக்கான மக்கள் இருப்பதால் இந்தியா ஏற்கனவே ஏற்றுமதிக்கு உகந்த நாடாக பல நிறுவனங்களால் கருதப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள நோய் தொற்றால், உற்பத்திக்கான நாடாகவும் இந்தியாவை அந்த நிறுவனங்கள் பார்க்கத் துவங்கியுள்ளன.

இந்த தருணத்தில் தடையற்ற மின்சாரம், கட்டமைப்பு வசதிகள், ஒற்றை சாரள முறை உரிமம் உள்ளிட்டவற்றை இந்தியா வழங்கினால் பெருமளவிலான அன்னிய முதலீட்டை ஈர்க்க முடியும்.UBS நிறுவனம் கடந்த டிசம்பர்- ஜனவரி மாதங்களில் நடத்திய ஆய்வில் 450 க்கும் அதிகமான பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து தங்களது உற்பத்தியை இதர நாடுகளுக்கு மாற்ற திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments