எதிரியின் எல்லைக்குள் திட்டமிட்டு தாக்குதல் நடத்த போர் தேவையில்லை -ராணுவ தளபதி
எதிரியின் எல்லைக்குள் திறமையாக திட்டமிட்டு தாக்குதல் நடத்தினால் போர் இல்லாமலேயே இலக்குகளை அழிக்க முடியும் என்று ராணுவ தளபதி எம்.எம்.நரவானே கூறியிருக்கிறார்.
மாறி வரும் தரைப்போர்த் தளவாடங்கள் மற்றும் ராணுவத்தில் அதன் தாக்கம் என்ற தலைப்பில் டெல்லியில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பேசிய அவர் இந்திய ராணுவ த்தின் பாலாகோட் தாக்குதலை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்தார்.
வருங்காலத்தில் லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ஆயுதங்கள் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் என்றார் அவர். சீனா பற்றி குறிப்பிட்ட நரவானே, பல ஆண்டுகளாக நேரடி போரில் பங்கேற்று தனது வலிமையை காட்டாத அந்த நாடு, படைபலம் மிக்கதாக தன்னை சித்தரித்துக் கொள்வதாக கூறினார்.
சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் அமெரிக்க, பிரிட்டன் படைகளை விடவும் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் முன்னிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments