பனிகட்டியில் உறைந்து கிடக்கும் வரலாற்று பறவை, விலங்கினங்கள்

0 1052

­­­­­­­உலகில் பனிகட்டி அதிகம் உறைந்து இருக்கும் சைபீரிய பெர்மாஃப்ரோஸ்ட் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  பறவைகள் மற்றும் விலங்குகளின் சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

சைபீரிய பெர்மாஃப்ரோஸ்டில் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சில அடையாளங்களும் வரலாற்று தடயங்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பறவை அதன் இறகுகளோடு இறந்து கிடப்பதை கண்டுபிடித்து அதனை ஆராய்ச்சி செய்து வந்தனர்.

image

மேற்கொண்டு பறவையை ஆராய்ச்சி செய்ததில் 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த லார்க் அல்லது எரெமோபிலா அல்பெஸ்ட்ரிஸ் என்ற இனத்தை சேர்ந்தது என்றும் மேலும் இது இன்று உயிருடன் இருக்கும் இரண்டு வகையான பறவை இனங்களின் முந்தைய இனங்களாக இருக்ககூடும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

சைபீரியாவில் உள்ள பெலாயா கோரா என்னும் கிராமமானது உறைந்த பனிகட்டிகளாக காணப்படும் பகுதியாகும். அங்குள்ள 23 அடி ஆழம் கொண்ட சுரங்கபாதையில் அங்கு வாழும் வேட்டையாடும் மக்களால் சிறகுகளுடன் உறைந்து சடலமாக இருந்த இந்த அறிய வகை பறவை கண்டுபிடிக்கபட்டுள்ளது. 

image

உறைந்த நிலையில் இறந்து கிடக்கும் பறவைகள் மற்றும் விலங்கினங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பனி யுகத்தின் கால நிலை மாற்றங்களால் அழிந்து போன பறவை மற்றும் விலங்கு இனங்களை சேர்ந்ததாகும். இங்கு காணப்படும் உறைந்து போன பனி அடுக்குகளால் பறவை தனது இறகுகளோடு உறைந்து போய் இறந்து உள்ளது என்று பரிணாம மரபியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பறவையின் உடம்பில் உள்ள ஒவ்வொரு மரபணுக்களையும் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதன் மூலம் விலங்குகளின் பரிணாம வளர்ச்சியையும், உறைந்த பனி அடுக்குகளில் வாழும் பறவைகளின் வாழ்வு நிலைகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

image

கடந்த ஆண்டு சைபீரியாவின் கிழக்கு பகுதியில் 34 டிகிரி பாரன்ஹீட்டால் காணப்படும் அப்பகுதியில் 18,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஓநாய் -நாய் உறைந்து இறந்து கிடப்பதை கண்டறிந்தனர். அதன் மரபணுக்களை பரிசோதித்ததில் அது ஓநாய் மற்றும் நாய் இல்லை என்றனர். மேலும் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ப்ளீஸ்டோசீன் காலத்தில் வாழ்ந்த பழமையான ஓநாயின் தலையையும் கண்டறிந்துள்ளனர்.

சைபீரிய பெர்மாஃப்ரோஸ்டில் உள்ள டன்ட்ராவில் உறைந்த பனி அடுக்குகளின் அடியில் வரலாற்றுக்கு முந்தைய பல அறிய வகை விலக்கினங்கள், பறவைகள் இருக்ககூடும் என்று மேலும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் பூமியின் கால நிலை மாறி கொண்டு வருவதால் இங்குள்ள உறைந்த பனிகட்டிகளின் உறைநிலை உருகும் என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments