எலும்புகளை வலுவடைய செய்யும் பதநீர், இறக்கும் தொழில் தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதநீர் இறக்கும் தொழில் தொடங்கியுள்ளது.
மாசி மாதம் முதல் பனைகளில் பாளை வெளிவரும் என்பதால், அப்போதிருந்து பனைத்தொழிலாளர்கள் பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் அருகே உள்ள பணகுடி, ரோஸ்மியாபுரம், வடலிவிளை, ராஜபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் பனைத் தொழிலாளர்கள் ஒரு நாளில் மூன்று முறை பனையில் ஏறிப் பாளை சீவி வருகின்றனர். இதனால் காலையில் பதநீர் இறக்கிப் பொதுமக்களுக்கு விற்பதுடன் மீதியைக் காய்த்துக் கருப்பட்டி தயாரித்து வருகின்றனர். ஒரு செம்பு முப்பது ரூபாய் என்கிற விலைக்கு விற்கப்படுகிறது.
பதநீர் அருந்துவதால் உடல் சூடு நீங்கி ஊட்டச்சத்துப் பெறுவதுடன், எலும்புகள் வலுவடையும் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பதநீர் அருந்திச் செல்கின்றனர்.
Comments