சென்னை பா.ஜ.க அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் மிரட்டல் கடிதம்

0 1278

சென்னை பா.ஜ.க அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் மூலம் மிரட்டல் கடிதம் வந்ததாக கூறப்படும் நிலையில், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு மர்ம கடிதம் வந்ததாகவும், அதில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தினால், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் என எழுதியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கடிதத்தை கைப்பற்றியுள்ள போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மிரட்டலைத் தொடர்ந்து, பாஜக அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments