நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு

0 1559

இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கோரும் மனுவுக்கு சென்னை காவல் ஆணையர் பதில் அளிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் துக்ளக் இதழ் விழாவில் பேசிய ரஜினி 1971-ஆம் ஆண்டு திராவிடர் கழகப் பேரணி குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். இதற்கு எதிரான திராவிடர் விடுதலைக் கழகம் சார்பிலான மனுவில் ரஜினி பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் இரு பிரிவினரிடையே பகை மற்றும் மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையம், சென்னை காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதிசென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர், ரஜினி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments