இந்தியாவில் 28 பேருக்கு கொரானா பாதிப்பு கண்டுபிடிப்பு

0 27127

இந்தியாவில் 28 பேருக்கு இதுவரை கொரானா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரானா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்துவது குறித்து, டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் இன்று அதிகாரிகளுடன் உயர்நிலை ஆய்வில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷ் வர்த்தன், இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். வெளிநாடுகளில் இருந்து கொரானா பரவுவதை தடுக்கும் வகையில், இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச விமானங்களும், பயணிகளும் விமான நிலையங்களிலேயே சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட 28 பேரில், ஒருவர் டெல்லியை சேர்ந்தவர் என்றும், 6 பேர் ஆக்ராவிலுள்ள டெல்லி நபரின் உறவினர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். இதுதவிர்த்து இத்தாலி நாட்டினர் 16 பேருக்கும், அவர்களது ஓட்டுநர் ஒருவருக்கும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த ஹர்ஷ் வர்த்தன், தெலுங்கானாவில் ஒருவருக்கும், கேரளாவில் 3 பேருக்கும் வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது எனவும் கூறினார்.

விமான நிலையங்களில் இதுவரை 5 லட்சத்து 89 ஆயிரம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும், நேபாள எல்லையில் 10 லட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். கொரானாவால் பெரிதும் பாதிப்பை சந்தித்து வரும் ஈரான் கேட்டுக் கொண்டால் அந்நாட்டில் பரிசோதனை நிலையத்தை அமைத்து தர இந்தியா தயாராக உள்ளதாகவும் ஹர்ஷ் வர்த்தன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments