20 ஓவர் கிரிக்கெட் - பேட்டிங் உலகத் தரவரிசையில் இந்தியப் பெண் முதலிடம்

0 2418

20 ஓவர் கிரிக்கெட் போட்டி பேட்டிங் உலகத் தரவரிசையில் பதினாறே வயதான இந்திய வீராங்கனை சபாலி வர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

இதுவரை 18 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள சபாலி வர்மா மொத்தம் 485 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மட்டும் 4 ஆட்டங்களில் 161 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.

இதனால் இருபது ஓவர் போட்டி பேட்டிங்கில் உலகத் தரவரிசையில் ஒரே முறையில் 19 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் ஸ்மிருதி மந்தணா ஆறாமிடத்தில் உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments