கொரானா அச்சுறுத்தலால் தள்ளிப்போகுமா IPL போட்டிகள்..?

0 4865

கொரானா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவான கொரானா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள், மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், வைரஸால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என்று கங்குலியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ஐபிஎல் போட்டிக்கோ, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கோ அதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பதிலளித்தார். இதேபோல் ஐபிஎல் நிர்வாக கவுன்சில் தலைவர் பிரிஜேஷ் படேலும், ஐபிஎல் போட்டிகள் ரத்தாகாது என   கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments