37 பந்துகளில் சதம் விளாசி அசத்திய பாண்டியா

0 9998

இந்திய அணி வீரர் ஹார்திக் பாண்டியா, 37 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு முதுகு காயத்துக்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக பாண்டியா ஓய்வில் இருந்தார்.

இருப்பினும் சிகிச்சைக்கு பின்பு குணமடைந்து, டிஒய் பாட்டீல் டி20 கோப்பை ((DY Patil T20 Cup)) போட்டியில், ரிலையன்ஸ் ஒன் ((Reliance 1)) அணி சார்பில் அவர் விளையாடி வருகிறார்.

மும்பையில் நடைபெற்ற சிஏஜி ((CAG)) அணிக்கு எதிரான போட்டியில் பாண்டியா அதிரடியாக 39 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். இதில் 10 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தனது அதிரடி ஆட்டத்தை மீண்டும் பாண்டியா வெளிப்படுத்தியிருப்பதன் மூலம், இந்திய அணியில் அவர் இடம்பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments