மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும் சிக்கல்?
மத்திய பிரதேசத்தில் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை இழக்கும் நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் எம்,எல்.ஏ.க்கள் 114 பேரும், பகுஜன்சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், சமாஜ்வாதியின் ஒரு எம்.எல்.ஏ. ஆகியோர் ஆதரவாக உள்ளனர். சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் அரசுக்கு ஆதரவு அளித்து வந்தனர். பிரதான எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில் சுயேட்சைகள் 4 பேரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 4 பேரும் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் நோக்கில் அண்டை மாநிலம் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து 230 பேர் உள்ள சட்டசபையில் காங்கிரசின் பலம் 110 ஆக குறைய வாய்ப்புள்ளது.
Comments