நண்பர்களுக்கு உதவ வேண்டும் தான்..! அதற்காக இதிலுமா..?

0 13261

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு மெட்ரிகுலேசன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதில் சுவர் ஏறி அவர்களின் நண்பர்கள் பிட் பேப்பர் வழங்கும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

யாவத்மால் மாவட்டத்தில் மகாகோன் பகுதியில் சைலா பரிஷத் என்னும் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நேற்று 10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.

காலையில் அந்த பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பித்த போது அவர்களின் நண்பர்கள் பள்ளியின் சுற்றுச்சுவரில் ஏறி விடைத்தாள் எழுதிய தாளை அதாவது பிட் பேப்பரை ஜன்னல் வழியாக எறிந்தனர். இந்த காட்சியை அந்த வழியாக சென்ற யாரோ வீடியோவாக வெளியிட, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments