கொரானாவை தடுக்க மாஸ்க் அவசியமா?

0 2046

கொரானா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க, எல்லோரும், சர்ஜிக்கல் மாஸ்க் எனப்படும் முகமூடிகளை அணிய தேவையில்லை என பல்வேறு மருத்துவ நிபுணர்களும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் வழிகாட்டுதல் வழங்கியிருக்கின்றனர்.

சர்ஜிக்கல் மாஸ்க் அணிவதால் பெரியளவில் பயன் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மூக்கையும், வாய் பகுதியையும் நன்றாக முகத்தோடு இறுக்கமாக மூடவல்ல, N95 உள்ளிட்ட உயர்ரக நவீன முகமூடிகளே சிறந்தது என்றும் அவர்கள் வழிகாட்டுகின்றனர். இந்த முகமூடிகளால் மட்டுமே, காற்றில் பரவும், கொரானா வைரஸ் போன்ற நுண்கிருமிகளை தடுக்க முடியும் என்கின்றனர்.

அடிக்கடி கைகளை கழுவதன் மூலமும், பிரத்யேக சானிடைசர்களை கொண்டு, கரங்களை சுத்தப்படுத்திக் கொள்வதன் மூலமும், பொது இடங்களில், பரஸ்பரம் நெருக்கமாக நின்று பேசுவதை தவிர்ப்பதன் மூலமும் கொரானாவை தடுக்கலாம் என்பதே எதார்த்தம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments