இந்தியாவில் கியா மோட்டார்ஸ் விற்பனையில் சாதனை
பிரபல கொரிய கார் நிறுவனமான, கியா கார்ஸ் பிப்ரவரி மாதத்தில் 15,644 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
2020ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பயணிகள் கார் விற்பனையில், 4.4 சதவிகிதம் குறைந்துள்ள நிலையில், கியா மோட்டார்ஸ் இந்தியா 1.3 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.
நாட்டின் சிறிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான கியா மோட்டார்ஸ் இந்தியா, பிப்ரவரி 2020 மாதத்தில் 15,644 யூனிட்டுகளுடன் அதிக விற்பனையை பதிவு செய்து, நாட்டின் மூன்றாவது பெரிய கார் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.
அதேபோல் எஸ்யூவி ரக கார் வகையான கியா செல்டாஸ் பிற கார்களை பின்னுக்கு தள்ளி 14,024 யூனிட்டுகளை விற்பனை செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதன் புதிய வரவான, கியா கார்னிவல் 1,620 யூனிட்டுகளை விற்பனை செய்து வாடிக்கையாளார்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 2020ம் ஆண்டு பிப்ரவரியில் பயணிகள் வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை 4.4 சதவீதம் குறைந்துள்ளது. இந்த நிலையில், கியா மோட்டார்ஸ் இந்தியாவில் 1.3 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
Comments