TVS நிறுவனத்தின் பிப்ரவரி 2020ம் ஆண்டு விற்பனை குறைவு

0 1337

நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தின் வாகன விற்பனையில் 15.39% குறைந்துள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, நடப்பாண்டில், பிப்ரவரி மாதம் டிவிஎஸ் நிறுவனம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 261 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதேபோல் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் வாகன விற்பனை 2 லட்சத்து 99 ஆயிரத்து 353 விற்பனை செய்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, டிவிஎஸ் நிறுவனத்தின், வாகன விற்பனை 15.39% குறைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டில், நிறுவனத்தின் மொத்த விற்பனையானது 2 லட்சத்து 85 ஆயிரத்து 611 ல் இருந்து 17.4% குறைந்து 2 லட்சத்து 35 ஆயிரத்து 891 ஆக உள்ளது.

இதேபோல், டிவிஎஸ் நிறுவனத்தின், உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனையில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 582 இல் இருந்து 1 லட்சத்து 69 ஆயிரத்து 684 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இது முந்தைய மதிப்பை விட உள்நாட்டு வாகன விற்பனையில் 26.72% ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால், பிஎஸ் 6 வாகன தயாரிப்பிற்கான உதிரி பாக சப்ளை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், விரைவில் இதற்கான தீர்வு காணப்படும் எனவும் டிவிஎஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments